என் மலர்

    சினிமா

    ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்
    X

    ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லும் ஜெய்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பலூன், பார்ட்டி, கலகலப்பு 2 படங்களை தொடர்ந்து அனைவரையும் ‘ஜருகண்டி’ என்று சொல்ல வருகிறார் ஜெய்.
    ஜெய் நடிப்பில் தற்போது ‘பலூன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் இவருடன் அஞ்சலி, ஜனனி ஐயர், சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘பார்ட்டி’ படத்திலும், சுந்தர்.சி இயக்கத்தில் ‘கலகலப்பு 2’ படத்திலும் நடித்து வருகிறார் ஜெய்.

    மேலும் நடிகர் நிதின் சத்யா தயாரிப்பில், ஜெய் நடித்து வருகிறார். இப்படத்தை வெங்கட் பிரபுவிடன் உதவி இயக்குனராக இருந்த பிச்சுமணி இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘ஜருகண்டி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மேலும் இதன் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது இந்த மோஷன் போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இது குறித்து தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறும்போது, ‘ஜருகண்டி என்பது மிகப் பிரபலமான வார்த்தை. நம் பேச்சுக்கு இடையில் இதை பயன் படுத்துகிறோம். அப்படி என்றால் தள்ளு என்று அர்த்தம். எங்கள் படத்தின் திரைக்கதை மிக வேகமாக இருக்கும். அதனால், இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறோம்’ என்றார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிந்து விட்டதாகவும் கூறியிருக்கிறார்.
    Next Story
    ×