என் மலர்

    சினிமா

    மலேசியாவில் பிரமாண்ட கலைவிழா: ரஜினி, கமல் பங்கேற்பு
    X

    மலேசியாவில் பிரமாண்ட கலைவிழா: ரஜினி, கமல் பங்கேற்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருகிற ஜனவரி மாதம் மலேசியாவில் ரஜினி, கமல் பங்கேற்கும் பிரமாண்ட கலைவிழா நடைபெற இருக்கிறது. அதனுடன் நட்சத்திர கிரிக்கெட் போட்டியும் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    தென் இந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகிற ஜனவரி 6-ந் தேதி மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி, நடனம், நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா, விஷால், கார்த்தி, ஜெயம்ரவி, ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.

    ரஜினி, கமல் உட்பட 100-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் கால்பந்து போட்டி ஒன்றும் நடைபெற உள்ளது. இதில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோத உள்ளனர்.



    எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறுகிறது.

    சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி, கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், மனோபாலா, குட்டி பத்மினி, ரோகிணி, பசுபதி, ரமணா, நந்தா, உதயா, ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர். நடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்ள அழைப்புவிடுத்தனர்.

    இந்த விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறுகிறது. இதில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×