என் மலர்

    சினிமா

    தமிழக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் `அறம்
    X

    தமிழக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் `அறம்'

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கோபி நைனார் இயக்கத்தில் கலெக்டராக நயன்தாரா நடித்திருக்கும் `அறம்' படம் தமிழக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    நயன்தாரா நடிப்பில் வருகிற நவம்பர் 10-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் படம் `அறம்'.

    கோபி நைனார் இயக்கி இருக்கும் இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

    ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர்.



    தாங்கள் ஒதுக்கப்பட்டதுக்காகவும், புறக்கணிக்கப்பட்டதற்காகவும் தற்போது கொந்தளித்தும் கொண்டிருக்கும் தமிழக மக்களின் பொதுவான அதிருப்தி மனநிலையை பிரதிபலிக்கும் படமாக 'அறம்' உருவாகியுள்ளது.

    மக்கள் இடையேயும், விநியோகஸ்தர்கள் இடையேயும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியாளராக நடித்திருக்கிறார். இப்படம் சமுதாய பிரச்சனைகளை பற்றி வெறுமனே பேச்சில் அலசி கொண்டிருக்காமல், சில பல செயல் திட்டங்களையும் அலசி உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


    Next Story
    ×