என் மலர்

    சினிமா

    ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்
    X

    ஹார்வர்டு தமிழ் இருக்கைக்காக இசை நிகழ்ச்சி நடத்தும் ஜி.வி.பிரகாஷ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசை கச்சேரி நடத்தி நிதி திரட்ட இருக்கிறார்.
    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்காக பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக தமிழக அரசு சமீபத்தில் 10 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார் ஜி.வி.பிரகாஷ்.

    முதல்வரை சந்தித்தது தொடர்பாக ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, ‘ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் சமயத்தில் வாக்குறுதி கொடுத்திருந்தார். அதை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தேன்.

    தமிழ் இருக்கைக்காக பெரும் தொகையை தமிழக அரசாங்கம் கொடுத்திருக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விஷயத்தில் உறுதுணையாக இருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு நன்றி.

    தமிழ் இருக்கை அமைவதற்காக அனைவரும் ஒன்றுகூடியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அத்தொகையில் 75% கடந்திருக்கிறோம், இன்னும் 25% கடக்க வேண்டும். இதில் வெற்றியடைவோம் என்று நம்புகிறேன். தமிழ் உணர்வில் ஒன்றாக இணைந்திருக்கிறோம். இந்த முயற்சிக்கு மத்திய அரசும் உதவ வேண்டும்.

    மேலும், நிதி திரட்டுவதற்காக வெளிநாட்டு இசை நிகழ்ச்சி ஒன்றையும் திட்டமிட்டு இருக்கிறோம். அதன் மூலம் வரும் நிதியையும் இதற்காக அளிக்கவுள்ளேன். ஏ.ஆர்.ரகுமான் சார், சூர்யா சார், விஷால் சார் உள்ளோட்டோரும் தமிழ் திரையுலகிலிருந்து நிதியுதவி அளித்திருப்பதில் மகிழ்ச்சி’ என்றார்.
    Next Story
    ×