என் மலர்

    சினிமா

    சூர்யா - செல்வராகவன் படத்தின் புதிய அப்டேட்
    X

    சூர்யா - செல்வராகவன் படத்தின் புதிய அப்டேட்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இணையும் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
    சூர்யா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.

    அதனைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா படங்களில் ஒரே சமயத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. சந்தானம் நாயகனாக நடித்துவரும் 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறாத நிலையில், செல்வராகவன் - சூர்யா இணையும் படத்தின் நிலை குறித்து கேள்வி எழுந்தது.

    இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, சூர்யாவின் அடுத்த படத்தை செல்வராகவன் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக செய்திகள் வரும் நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×