என் மலர்

    சினிமா

    கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
    X

    கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருவதாக இயக்குனர் சேரன் வேதனை தெரிவித்துள்ளார்.
    கோவில்பட்டியில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குநரும், நடிகருமான சேரன் கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    பார்க்கிற சினிமாவிற்கும், அதன் உருவாக்கத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். சினிமா தற்போது விவசாயம் மாதிரியாகிவிட்டது. முதலீடு திரும்ப கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி விட்டது. தற்போது சினிமா வெற்றி பெற மார்க்கெட்டிங் தான் முக்கியம். அதிலும் நேர்மையாக மார்க்கெட்டிங் பண்றவங்களும் உள்ளனர், ஏமாற்றுபவர்களும் இருக்கின்றனர்.

    படம் வெளியான அன்றே வெற்றிக்கான பார்ட்டி வைத்து ஏமாற்றும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சினிமாத்துறை நன்றாக இருந்தது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பணம் வைத்திருப்பவர்கள் பணத்தின் மூலம் எல்லா தொழிலுக்கும் வந்து விட்டனர்.



    சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளே புகுந்து படம் பண்ண தெரியாவிட்டாலும் கோடிக்கணக்கில் படத்தினை வாங்கி வெளியிடுகின்றனர். லாபம் வருதோ இல்லையோ? மற்ற தொழில்களில் கிடைத்த கள்ள பணத்தினை சினிமாவில் புகுத்தி நல்ல பணமாக மாற்றிக்கொள்ளும் வழியை கண்டுபிடித்துள்ளனர். இவர்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது.

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு ஓவியா பல திரைப்படங்கள் நடித்தாலும் மக்களுக்கு தெரியவில்லை. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு அவரது மார்க்கெட் உயர்ந்துள்ளது. எனக்கு அரசு கல்வி வேண்டும், ஆனால் தரமான கல்வி இல்லை. அதனால் நான் பணம் கட்டி தனியார் கல்விக்கு செல்கிறேன். சாலை, குடிநீர் என எல்லாவற்றுக்கும் வரி செலுத்துகிறோம். ஆனால் அரசு மக்கள் நலனில் கவனம் செலுத்தவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×