என் மலர்

    சினிமா

    தனுஷ் படத்தில் இருந்து வெளியான ரகசியம்
    X

    தனுஷ் படத்தில் இருந்து வெளியான ரகசியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தனுஷ் நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் `எனை நோக்கி பாயும் தோட்டா' படக்குழு வெளியிடாமல் இருந்த ரகசியம் ஒன்று தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'.

    காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

    படத்தில் இருந்து "மறுவார்த்தை பேசாதே", "நான் பிழைப்பேனோ" என இரு பாடல்களை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை வெளியிடாமல் கவுதம் மேனன் சஸ்பென்ஸாக வைத்திருந்தார். படத்தின் டீசரை வெளியிடும் போதும் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் மிஸ்டர்.எக்ஸ் (Mr.X) என்றே குறிப்பிட்டிருந்தார்.



    எனினும் தர்புகா சிவா அல்லது லியோன் ஜேம்ஸ் தான் படத்திற்கு இசையமைத்திருப்பார்கள் என்று ரசிகர்கள் யூகித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

    தீபாவளி விருந்தாக இயக்குநர் கவுதம் மேனன் அவரது டுவிட்டர் பக்கத்தில் "மறுவார்த்தை பேசாதே" பாடலின் ரீஸ்ட்ரங் வெர்சனை வெளியிட்டிருக்கிறார். அதில் படத்தின் இசையமைப்பாளர் (Mr.X) தர்புகா சிவா என்று குறிப்பிடப்பிட்டிருந்தது.

    நடிகர் ராணா டகுபதி, சுனைனா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    Next Story
    ×