என் மலர்

    சினிமா

    ஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை
    X

    ஜப்பானில் மெர்சலுக்கு கிடைக்கும் பெருமை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு, ஜப்பானில் எந்த தமிழ்ப் படத்திற்கும் கிடைக்காத பெருமை கிடைக்க இருக்கிறது.
    விஜய்யின் மெர்சல் படம் உலக தமிழர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள், வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா என படம் முழுவதும் நிறைய பிரபலமான நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 18ம் தேதி வெளியாக இருக்கிறது.

    ஜப்பானில் வரும் அக்டோபர் 20 ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தை ஜப்பானில் வெளியிடும் உரிமையை ‘ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான்’ (SPACEBOXJAPAN) எனும் நிறுவனம் பெற்றுள்ளது. அனைத்து தமிழ் படமும் ஜப்பானில் உள்ள யொகோயமா (Yokoyama) மற்றும் டோக்கியோ (Tokyo) ஆகிய இரண்டே ஏரியாக்களில் மட்டுமே வெளியிடுவார்கள்.

    ஆனால் முதன் முறையாக ஸ்பேஸ்பாக்ஸ் ஜப்பான் நிறுவனம் நகோயா (Nagoya), ஒசாகா (Osaka), குன்மா (Gunma) போன்ற நகரங்களில் மெர்சல் திரைப்படத்தை வெளியிட ஏற்பாடு செய்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ஜப்பானில் வெள்ளிக்கிழமையே வெளியாக போகும் முதல் தமிழ் படமும் இதுதானாம்.
    Next Story
    ×