என் மலர்

    சினிமா

    உச்சக்கட்ட மோதலில் விஷால் - அபிராமி ராமநாதன்
    X

    உச்சக்கட்ட மோதலில் விஷால் - அபிராமி ராமநாதன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேளிக்கை வரி பிரச்சனையால், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷாலுக்கும், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதனுக்கும் உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தமிழ் படங்களுக்கு கேளிக்கை வரியை 8 சதவீதமாக குறைத்தும், தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியும் தமிழக அரசு அறிவித்தது.

    கேளிக்கை வரி மற்றும் ஜி.எஸ்.டி. வரியை சேர்த்து மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் அதிகபட்சம் ரூ.204 என்றும், குறைந்த பட்சம் ரூ.63 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஏசி தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணம் ரூ.136 என்றும் குறைந்த பட்ச கட்டணம் ரூ.50 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத தியேட்டர்களில் அதிக பட்ச கட்டணம் ரூ.100 என்றும், குறைந்த பட்ச கட்டணம் ரூ.38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதையடுத்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தியேட்டர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தைத்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும். கேண்டீனில் அதிகபட்ச சில்லரை விலைக்குள்தான் உணவுப் பொருட்களை விற்க வேண்டும். அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது. ஆன்லைன் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும். இதை மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது அரசிடம் புகார் செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து நேற்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை மட்டுமே வசூலிப்பது, அதிகபட்ச சில்லரை விலைக்குள் உணவுப் பொருட்களை விற்பது. அம்மா குடிநீர் பாட்டில்களை விற்பது ஆகிய 3 கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. பார்க்கிங் கட்டணம் தொடர்பாகவும், ஆன்லைன் கட்டணம் தொடர்பாகவும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

    கூட்டம் முடிந்த பிறகு சென்னை நகர திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மீது கடுமையாக சாடினார். அபிராமி ராமநாதன் கூறியதாவது:-

    தியேட்டர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் அறிக்கை விடுத்திருப்பது எந்த விதத்தில் நியாயம், யாரும் யாருக்கும் முதலாளிகள் அல்ல. ஒரே துறையில் இருக்கும் இரு தரப்பினர் அண்ணன்-தம்பி போல் பழக வேண்டும். அவர்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. எங்களுக்கு ஒரு சங்கம் இருக்கிறது. பிரச்சினை என்று வந்தால் இரு தரப்பினரும் சமூகமாக பேசி முடிவு எடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு தனிப்பட்ட முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது.

    நாங்கள் தியேட்டர்களில் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். எனவே எல்லா வி‌ஷயத்திலும் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நடிகர்கள் இஷ்டம்போல் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறார்கள். குறிப்பிட்ட தொகையை மட்டும்தான் நடிகர்கள் சம்பளமாக வாங்க வேண்டும் என்று நாங்கள் சொன்னால் அவர்கள் ஏற்பார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விவகாரத்தில் தற்போது நடிகர் விஷாலுக்கும், அபிராமி ராமநாதனுக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
    Next Story
    ×