என் மலர்

    சினிமா

    நயன்தாராவின் `அறம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
    X

    நயன்தாராவின் `அறம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் `அறம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.

    கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளாக தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக `அறம்', `வேலைக்காரன்', `இமைக்கா நொடிகள்', `கொலையுதிர் காலம்', சயீ ரா நரசிம்மரெட்டி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது.

    இதில் சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் `வேலைக்காரன்' படம் தள்ளிப்போனதை அடுத்து, கோபி நைனார் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் `அறம்' படம் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கேளிக்கை வரி உள்ளிட்ட பிரச்சனையால் புது படங்கள் ரிலீசாகவில்லை. இந்த பிரச்சனைக்கு நேற்று தீர்வு எட்டியுள்ளதை அடுத்து படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன.



    இதையடுத்து தீபாவளிக்கு விஜய்யின் `மெர்சல்', வைபவ் - ப்ரியா பவானி சங்கரின் `மேயாத மான்', சரத்குமாரின் `சென்னையில் ஒரு நாள்-2' உள்ளிட்ட படங்கள் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதனைத் தொடர்ந்து சித்தார்த்தின் `அவள்', சுசிகணேசனின் `திருட்டுபயலே-2', செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' உள்ளிட்ட படங்கள் நவம்பர் 3-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நயன்தாராவின் `அறம்' படமும் அதே நாளில் ரிலீசாக இருப்பதாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    தணிக்கை குழுவில் படத்திற்கு 'யு' சான்றிதழை பெற்றுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
    Next Story
    ×