என் மலர்

    சினிமா

    பேச்சுவார்த்தையில் இழுபறி: தீபாவளிக்கு படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு?
    X

    பேச்சுவார்த்தையில் இழுபறி: தீபாவளிக்கு படங்கள் வெளியாவதில் சிக்கல் நீடிப்பு?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பேச்சுவார்த்தையில் நீடித்து வரும் இழுபறி காரணமாக தீபாவளிக்கு படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
    பண்டிகை நாட்களில் திரைப்படங்கள் வெளியாவதை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.

    எனவே, முக்கிய பண்டிகைகள் வரும்போது எத்தனை படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

    இந்த தீபாவளிக்கு விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’, நயன்தாரா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘அறம்‘, சரத்குமார் நடித்திருக்கும் ‘சென்னையில் ஒருநாள்-2’, சசிகுமாரின் ‘கொடிவீரன்’ ஆகிய படங்கள் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த படங்களை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்த படங்கள் வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு 10-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருந்தன.



    இந்த நிலையில் சினிமா டிக்கெட்டுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் சினிமா கட்டணமாக 10 சதவீத கேளிக்கை வரி செலுத்த வேண்டும். வெளி மாநில படங்களுக்கு 20 சதவீதம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானது. இதற்கு தியேட்டர் அதிபர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஏற்கனவே சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீத ஜி.எஸ். டி. வரி செலுத்தப்படுகிறது. உள்ளாட்சி கேளிக்கை வரியையும் செலுத்தினால் தியேட்டர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள். எனவே உள்ளாட்சி கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    கூடுதல் கேளிக்கை வரி காரணமாக, திரைக்கு வர இருந்த புதிய படங்களை பட அதிபர்கள் சங்கம் வெளியிடாமல் நிறுத்தி வைத்தது.

    கேளிக்கை வரி விதிப்பை ரத்து செய்யாவிட்டால் தியேட்டர்களை மூடப்போவதாக தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் அறிவித்தனர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மூடப்பட்டன. டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.



    இதையடுத்து தியேட்டர்களுக்கு சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்தது. என்றாலும் அனைத்து தியேட்டர்களுக்கும் ஒரே மாதிரியாக கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதற்கிடையே கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதில் நல்ல முடிவு ஏற்படும் என்று திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.



    இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, ‘இனி தியேட்டர்களில் ஆன்லைன் டிக்கெட் கட்டணம், வாகன நிறுத்துவதற்கான கட்டணம் வசூலிக்க கூடாது. கேண்டீனில் பொருட்களை எம்.ஆர்.பி. விலைக்குத்தான் விற்க வேண்டும். தியேட்டரில் அம்மா குடிநீர் பாட்டில் விற்க வேண்டும். படம் பார்க்க வருபவர்கள் தண்ணீர் கொண்டு வர அனுமதிக்க வேண்டும். மீறி செயல்படும் தியேட்டர்கள் மீது புகார் கொடுத்தால் அந்த தியேட்டர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது. இந்த கோரிக்கைகள் இன்று அரசிடம் வைக்கப்படும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.

    தீபாவளிக்கு திரையிட தயாராக உள்ள படங்களில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ நிச்சயம் ரிலீஸ் ஆகும் என்று அந்த பட தயாரிப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். எனவே, பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாவிட்டாலும் ‘மெர்சல்’ படம் திரைக்கு வருவது உறுதியாகி உள்ளது.

    மற்ற படங்களில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இன்றைய பேச்சுவார்ததை நல்லவிதமாக முடியும் என்று இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். எத்தனை படங்கள் தீபாவளி ரிலீஸ் என்ற அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×