என் மலர்

    சினிமா

    புதுபடங்களை திரையிடுவது 6 நாட்களாக நிறுத்தம்: தீபாவளிக்கு படங்கள் வெளியாகுமா?
    X

    புதுபடங்களை திரையிடுவது 6 நாட்களாக நிறுத்தம்: தீபாவளிக்கு படங்கள் வெளியாகுமா?

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய படங்கள் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு படங்கள் வெளியாகுமா? என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
    தமிழில் வெளியாகும் புதிய படங்களுக்கு அரசு 30 சதவீதம் கேளிக்கை வரி விதித்தது. பட அதிபர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பால் அது 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதையும் திரையுலகினர் கண்டித்துள்ளனர். கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி புதிய படங்களை வெளியிடுவதை நிறுத்தியுள்ளனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை திரைக்கு வருவதாக இருந்த விழித்திரு, உறுதிகொள், கடைசி பெஞ்ச் கார்த்தி, களத்தூர் கிராமம், திட்டிவாசல், உப்பு புளி காரம், அழகின் பொம்மி ஆகிய 7 படங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

    விஜய் நடித்துள்ள மெர்சல், சசிகுமாரின் கொடி வீரன், பரத் நடித்துள்ள பொட்டு ஆகிய 3 படங்களும் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 18-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களை விட தீபாவளிக்கு அதிக காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்குவது உண்டு. ஒருவாரம் அதிகமான வசூலும் இருக்கும்.



    இதனால் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் தீபாவளிக்கு படங்களை திரையிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மெர்சல் படம் ரூ.140 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

    உலகம் முழுவதும் 3300 தியேட்டர்களில் மெர்சல் திரையிடப்படும் என்றும் தமிழகத்தில் 500 தியேட்டர்களிலும் கேரளாவில் 325 தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கேளிக்கை வரியை 10 சதவீதத்தில் இருந்து குறைக்க முடியாது என்று அமைச்சர் அறிவித்து இருக்கிறார். பட அதிபர்கள் கேளிக்கை வரியை முழுமையாக நீக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள். அரசு தரப்பினரும் திரையுலகினரும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். சமரச முயற்சியில் இழுபறி நீடிப்பதால் தீபாவளி படங்கள் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
    Next Story
    ×