என் மலர்

    சினிமா

    100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்
    X

    100% காதலுடன் படத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜி.வி.பிரகாஷ் மற்றும் ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ஷாலினி பாண்டே நடிப்பில் உருவாக இருக்கும் ‘100% காதல்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
    ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘செம’, ‘அடங்காதே’, ‘4ஜி’, ‘அயங்கரன்’, ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.

    தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான '100% லவ்' படம் சூப்பர் ஹிட்டானது. அப்படத்தின் தமிழ் ரீமேக்காக ‘100% காதல்’ உருவாக இருக்கிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

    தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நடிகை ஷாலினி பாண்டே, படத்தின் இயக்குனர் எம்.எம்.சந்திரமெளலி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து 100% காதல் படத்தை தயாரிக்கின்றனர். எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷே படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை லண்டனில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
    Next Story
    ×