என் மலர்

    சினிமா

    கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை
    X

    கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேளிக்கை வரி தொடர்பாக 2 நாட்களுக்குள் நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
    கேளிக்கை வரியை ரத்துசெய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால், பொதுச்செயலாளர்கள் ஞானவேல்ராஜா, கதிரேசன், திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த டி.ஏ.அருள்பதி, தயாரிப்பாளர் எஸ்.தாணு, நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., தமிழ் திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆலோசனை கூட்டம் பிற்பகல் 2 மணி வரை நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



    அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, வேலுமணி ஆகியோரை சந்தித்து பேசினோம். கேளிக்கை வரி உள்பட தமிழ் சினிமா துறை சார்ந்த கோரிக்கைகள் தொடர்பாக அவர்களிடம் எடுத்து கூறினோம். முதல்-அமைச்சர் இதுதொடர்பாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். அனேகமாக நாளை (இன்று) அல்லது நாளை மறுநாள் (நாளை) நல்ல முடிவு கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    ‘மல்டி பிளக்ஸ்’ தியேட்டர்களுக்கு ஒரு டிக்கெட் கட்டணம் எனவும், மற்ற தியேட்டர்களுக்கு ஒரு கட்டணம் எனவும் நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். இதுதொடர்பாகவும் நாங்கள் கோரிக்கை வைத்து இருக்கிறோம்.

    இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத கேளிக்கை வரி தமிழகத்தில் விதிக்கப்பட்டு இருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் இந்த கேளிக்கை வரியை அதிகமான பாரமாக தான் நாங்கள் கருதுகிறோம். ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி அமலில் இருக்கும் போது, கேளிக்கை வரி விதிப்பு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

    தமிழ் சினிமாவில் இது ஒரு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளிடம் பேசி இருக்கிறோம். முதல்-அமைச்சர் எங்கள் கோரிக்கைகளுக்கு நல்ல பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறோம். நல்ல முடிவு வரும் வரை புதிய படங்கள் வெளியாகாது என்று ஏற்கனவே நாங்கள் தெரிவித்து இருந்தது தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×