என் மலர்

    சினிமா

    செல்பி எடுத்த ரசிகர்களுக்கு ஜெயாபச்சன் அறிவுரை
    X

    செல்பி எடுத்த ரசிகர்களுக்கு ஜெயாபச்சன் அறிவுரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபச்சன், விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதால் செல்பி எடுக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.
    நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயாபாதுரி. இருவரும் ஷோலே உள்பட பல படங்களில் ஜோடியாக நடித்தனர். அப்போது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    அதன்பிறகு அமிதாப் பச்சன் பல நடிகைகளுடன் காதல் ஏற்பட்டாலும், ஜெயா பாதுரியை கைவிடவில்லை. ஜெயாபச்சன் என்று அழைக்கப்பட்ட அவர் சினிமாவிலும், அமிதாப்பச்சன் நிறுவனங்கள் தொடங்கிய போதும், அவரது வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார்.

    ஜெயாபச்சனின் சொந்த ஊர் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் ஆகும். தாய் இந்திரா பாதுரி தந்தை தரூண்குமார் பாதிரி சிறந்த எழுத்தாளர். பத்திரிகையாளராகவும், நாடக கலைஞராகவும் திகழ்ந்தார்.

    சிறுவயதில் ஜெயாபாதுரி போபாலில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வென்டில் படித்தார். படிப்பில் அவர் முதல் மாணவியாக திகழ்ந்தார். என்.சி.சி.யிலும் பங்கெடுத்தார். 1966-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அகில இந்திய அளவில் சிறந்த என்.சி.சி. மாணவி விருது பெற்றார்.

    திருமணத்துக்கு பின்பு அரசியலில் குதித்தார். சமாஜ்வாடி கட்சி எம்.பி.யாக இருந்தார். மும்பையில் குடியேறிய பின்பு எப்போதாவதுதான் அவர் சொந்த ஊர் வருவார்.

    இந்த நிலையில் ஜெயா பச்சனின் சொந்த ஊரான போபாலில் நகைக்கடை திறப்பு விழா நடந்தது. இதில் ஜெயாபச்சன் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார். அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அவருடன் நின்று போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர்.

    முதலில் சமாளித்த ஜெயாபச்சன் பின்னர் ரசிகர்களை பார்த்து செல்பி எடுக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார். எத்தனை போட்டோ வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் செல்பி எடுப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே செல்பி எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

    மேலும் ரசிகர்கள் அவரிடம் நீங்கள் சொந்த ஊரை மறந்து விடாதீர்கள். அடிக்கடி வாருங்கள் என்று கேட்டுக் கொண்டனர்.
    Next Story
    ×