என் மலர்

    சினிமா

    ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு இருக்காது: சாருஹாசன் பேட்டி
    X

    ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு இருக்காது: சாருஹாசன் பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    “ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அரசியலுக்கு வந்தால் ஆதரவு இருக்காது. 10 சதவீதம் ஓட்டுகளை மட்டுமே அவர்களால் வாங்க முடியும்” என்று நடிகர் சாருஹாசன் கூறினார்.
    நடிகர் ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் விரைவில் அரசியலுக்கு வரப்போவதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து கமல்ஹாசனின் அண்ணனும் நடிகருமான சாருஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    “அரசியலில் மாற்று சக்தியாக திடீரென்று யாரும் வர முடியாது. கமல்ஹாசன் ஊழலை எதிர்க்க அரசியலில் ஈடுபடப் போவதாக கூறியிருக்கிறார். ஊழலை உடனடியாக ஒழிக்க முடியாது. அரசியலுக்கு வரும் அனைவருமே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனாலும் அவர்களும் அரசியலுக்கு வந்த பிறகு ஊழலில் சிக்கி விடுகிறார்கள்.

    அரசு ஊழியர்களில் சிலர் லஞ்சம் வாங்குகிறார்கள். மக்கள் ஓட்டுபோட பணம் வாங்குகிறார்கள். மக்கள் சரியாக இருந்தால்தான் ஆட்சியும் சரியாக இருக்கும். தமிழ் மொழியை வைத்துதான் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. மக்களை மொழி மாயையிலேயே அந்த கட்சிகள் வைத்து இருக்கின்றன. வேறு எதையும் அவர்கள் செய்யவில்லை.



    கமல்ஹாசன் அரசியலுக்கு வரப்போவதாக கூறியிருக்கிறார். அவர் மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லக்கூடியவர். திறைமையானவர், உழைப்பாளி. ஆனால் மக்கள் அவரை ஏற்பார்களா? என்பது சந்தேகம். ரஜினிகாந்தை அரசியலுக்கு ஏன் வரவில்லை என்று கேட்கும் மக்கள் கமல்ஹாசனை பார்த்து அரசியலுக்கு ஏன் வருகிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள்.

    எனவே கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சராகும் வாய்ப்பு இல்லை. தமிழ் நாட்டில் சாதி அடிப்படையில்தான் அரசியல் இருக்கிறது. எனவே கமல்ஹாசனுக்கு அது சாதகமாக இல்லை. கமல்ஹாசன் வேறு ஏதேனும் ஒரு கட்சியில் இருந்து விட்டு வந்து இருந்தால் மக்கள் ஏற்று இருப்பார்கள்.

    ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்குமே அரசியலில் பெரிய வாய்ப்பு இல்லை. இருவருக்கும் 10 சதவீதம் ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும். மீதி 90 சதவீதம் ஓட்டுகள் மற்ற அரசியல் கட்சிகளுக்குதான் விழும். மக்கள் சினிமாவை பார்த்து யாருக்கும் ஓட்டுபோடுவது இல்லை. ரஜினிகாந்த் மீது மக்களுக்கு கவர்ச்சி மயக்கம் உள்ளது. கமல்ஹாசனுக்கு அது இல்லை. நல்ல நடிகராக மட்டுமே அவரை பார்க்கிறார்கள்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வர மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.”

    இவ்வாறு சாருஹாசன் கூறினார்.
    Next Story
    ×