என் மலர்

    சினிமா

    எனக்கு தற்போது நேரம் சரியில்லை: ரசிகர்கள் மத்தியில் பேசிய திலீப்
    X

    எனக்கு தற்போது நேரம் சரியில்லை: ரசிகர்கள் மத்தியில் பேசிய திலீப்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    85 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்த ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ள திலீப் எல்லாம் விதிப்படி நடக்கிறது, எனக்கு தற்போது நேரம் சரியில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பேசினார்.
    நடிகர் திலீப் ஜாமீன் கிடைத்த பிறகு தனது ரசிகர்கள் மத்தியில் சிறிது நேரம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போது எனக்கு நல்ல நேரம் இல்லை. நேரம் சரி இல்லாததால் நான் செய்யாத தவறுக்காக ஜெயிலுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது. எனது தலைவிதிப்படி நான் ஜெயிலில் இருக்கும் சூழ்நிலை உருவானது. எல்லாம் விதிப்படி நடந்து உள்ளது. தற்போது கடவுள் புண்ணியத்தால் ஜெயிலில் இருந்து வெளியே வந்துள்ளேன். இனி நடப்பதும் விதிப்படி நடக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நடிகர் திலீப் ஜெயிலுக்கு செல்லும் முன்பு நடித்து முடித்திருந்த ராம்லீலா மலையாள படம் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் கிடைத்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் அருண்கோபி, தயாரிப்பாளர் தொம்மிச்சான் ஆகியோர் ஆரம்பம் முதலே திலீப்புக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.



    நடிகர் திலீப்புக்கு ஜாமீன் கிடைப்பதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக அவர்கள் இருவரும் நேற்று ஆலுவா ஜெயிலில் திலீப்பை சந்தித்து பேசினார்கள். இதுபற்றி அவர்கள் இருவரும் கூறியதாவது:- ஜெயிலில் திலீப்பை சந்தித்து ராம்லீலா படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்துள்ளது பற்றி தெரிவித்தோம். உடனே எங்களை கட்டிப்பிடித்து திலீப் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். நான் எதுவும் தவறாக செய்யவில்லை என்பது கடவுளுக்கு தெரியும் என்றார். அதன் பிறகு அவர் மவுனமாகிவிட்டார்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    அதன்பிறகு நடிகர் திலீப்பை ஜெயில் அதிகாரிகள் சந்தித்து அவருக்கு ஜாமீன் கிடைத்த தகவலை தெரிவித்தனர். அதை கேட்டதும் எனக்கு ஜாமீன் கிடைத்துவிட்டதா? என்று ஆச்சரியத்துடன் கேட்ட திலீப் தனது மகிழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் வாய்விட்டு பலமாக சிரித்துள்ளார்.


    Next Story
    ×