என் மலர்

    சினிமா

    `இந்தியன் 2-வுக்கு முன்பாக நாயுடுவை கவனிக்கும் கமல்
    X

    `இந்தியன் 2'-வுக்கு முன்பாக நாயுடுவை கவனிக்கும் கமல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    1996-ல் பிளாக்பஸ்டர் படமான `இந்தியன்' படம் ஷங்கர் - கமல் கூட்டணியில் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்பாக கமல் நாயுடுவை கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியாகி மெகா வெற்றி பெற்ற படம் `இந்தியன்'. இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கமல் - ஷங்கர் மீண்டும் இணையும் `இந்தியன்-2' படத்தை தில் ராஜு அவரது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

    தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் `இந்தியன்-2' படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

    அதற்கு முன்னதாக காலில் ஏற்பட்ட காயத்தால் தான் பாதியில் விட்டுவந்த `சபாஷ் நாயுடு' படத்தில் மீண்டும் நடிக்க இருக்கிறாராம். அந்த படத்தை முடித்த பிறகு கமல் `இந்தியன்-2' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே `விஷ்வரூபம்-2' படத்தில் பாக்கி இருக்கும் காட்சிகளையும் எடுத்து முடிக்க கமல் திட்டமிட்டிருக்கிறாராம்.



    இவ்வாறாக பிசியாக இருக்கும் கமல் அவரது அரசியல் படம் என்று அறிவித்துள்ள `தலைவன் இருக்கின்றான்' படத்தை தொடங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது.
    Next Story
    ×