என் மலர்

    சினிமா

    ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் விஜய்யின் ‘மெர்சல்’ டீசர் இன்று..
    X

    ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் விஜய்யின் ‘மெர்சல்’ டீசர் இன்று..

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஜல்லிக்கட்டு காளையுடன் களமிறங்கும் விஜய்யின் ‘மெர்சல்’ டீசர் இன்று வெளியாகிறது.
    ‘மெர்சல்’ படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் விஜய் ஜல்லிக்கட்டு வீரராக நடித்து இருக்கிறார். படம் தீபாவளிக்கு வெளியாகிறது.

    ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் 1992-ல் கதாநாயகனாக அறிமுகமான விஜய்க்கு மெர்சல் 61-வது படம். அவர் ஏற்கனவே நடித்த பூவே உனக்காக, நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி, பிரண்ட்ஸ், கில்லி, திருப்பாச்சி, காவலன், துப்பாக்கி உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்யிதில் நல்ல வரவேற்பை பெற்றன.

    இதற்கு முன்பு நடித்த ‘பைரவா’ படம் கடந்த ஜனவரியில் திரைக்கு வந்தது. அதன்பிறகு மெர்சல் படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே தெறி படம் வெளியானது. மெர்சல் படத்தில் கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் ஆகிய மூன்று பேர் நடித்துள்ளனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.



    இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது குரல் சேர்ப்பு, இசை கோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகின்றன. அடுத்த மாதம் தீபாவளி பண்டிகைக்கு மெர்சல் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இந்த படம் ரூ.130 கோடி செலவில் தயாராகி உள்ளது. விஜய் படங்களில் அதிக செலவில் உருவாகும் படம் இதுதான்.

    இந்த படத்தின் கதை மூன்று கால கட்டங்களில் நடப்பது போன்று உருவாக்கப்பட்டு உள்ளது. விஜய் மேஜிக் நிபுணர், பஞ்சாயத்து தலைவர், டாக்டர் என்று மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம்பெற்று உள்ளன. விஜய், காளைகளை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரராகவும் நடித்து இருக்கிறார்.

    தமிழகத்தில் நடந்த மாணவர்கள், இளைஞர்களின் ஜல்லிக்கட்டு எழுச்சியை ஆதரிப்பது போன்று இந்த காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. விஜய் காளையுடன் இருப்பது போன்ற படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘மெர்சல்’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. விஜய் ரசிகர்கள் மடடுமல்லாது அனைத்து தரப்பினருமே மெர்சல் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
    Next Story
    ×