என் மலர்

    சினிமா

    கபிலன் வைரமுத்துக்கு கைகொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
    X

    கபிலன் வைரமுத்துக்கு கைகொடுக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `இளைஞர்கள் என்னும் நாம்' என்ற ஆவணப்படத்தை வெளியிடுவதன் மூலம் கபிலன் வைரமுத்துக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைகொடுக்கிறார்.
    பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் கபிலன் வைரமுத்து. `இளைஞர்கள் என்னும் நாம்' என்ற அவரது ஆவணப்படம் ஒன்று தயாராகி உள்ளது. இந்த ஆவணப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

    அதனைத்தாெடர்ந்து, இந்த ஆவணப்படம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிடுகிறார்.



    பல கல்லூரி மாணவர்கள் இணைந்து உருவாக்கிய மக்கள் அணுக்கப் பேரவை(MAP) என்ற மாணவர் இயக்கம்(2000-2010) குறித்த ஆவணப்படம் தான் `இளைஞர்கள் என்னும் நாம்' என்ற தலைப்பில் தற்போது உருவாகி இருக்கிறது. இதற்குரிய ஆவணத்தை ர.கார்த்திகேயன் எழுதியிருக்கிறார்.

    ஊழலற்ற சமுதாயம், நேர்மையான தலைவர் என மக்கள் விரும்பும் படியான, இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒரு உந்துதல் அளிக்கக்கூடிய ஒரு ஆவணப்படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×