என் மலர்

    சினிமா

    துல்கர் சல்மானுடன் கைகோர்க்கும் டி.இமான்
    X

    துல்கர் சல்மானுடன் கைகோர்க்கும் டி.இமான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கவிருக்கும் புதிய தமிழ் படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். இவர் அவ்வப்போது தமிழ்ப் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிப்பில் வெளியான `வாயை மூடி பேசவும், `ஓ கே கண்மணி' உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், துல்கர் தற்போது `சோலோ', `மகாநதி' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர அறிமுக இயக்குநர் ரா.கார்த்திக் இயக்கத்தில் ஒரு படத்திலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    இதில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படம் சென்னை, கோவா மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×