என் மலர்

    சினிமா

    பாகுபலி இயக்குனரிடம் ஆலோசனை கேட்கும் சந்திரபாபு நாயுடு
    X

    பாகுபலி இயக்குனரிடம் ஆலோசனை கேட்கும் சந்திரபாபு நாயுடு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆந்திராவின் புதிய தலைநகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமராவதி நகரை உருவாக்க வடிவமைப்புக்கு ‘பாகுபலி’ இயக்குனரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் சந்திரபாபு நாயுடு
    ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு தெலுங்கானா மாநிலம் உதயமானது. இதையடுத்து ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இயக்குனர் ராஜமவுலி இயக்கிய ‘பாகுபலி’ படத்தின் பிரமாண்ட அரண்மனை போன்று தலைநகரம் இருக்க வேண்டும் என்று விரும்பிய சந்திரபாபு நாயுடு அதற்காக இயக்குனர் ராஜமவுலியிடம் ஆலோசனை கேட்டார். அவரும் சில யோசனைகளை தெரிவித்துவிட்டு தனது பட வேலையில் மும்முரமாக இறங்கினார்.

    அமராவதி தலைநகரம் வடிவமைப்பு பணியை முதலில் ஜப்பான் நிறுவனத்திடம் சந்திரபாபு கொடுத்து இருந்தார். ஆனால் அவர்களின் வடிவமைப்பு பிடிக்காததால் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ‘நாரிமன் பாஸ்டர்’ நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

    பிரபலமான இந்த நிறுவனம் ஜெர்மனியின் பாராளுமன்ற கட்டிடம், நியூயார்க் டவர் போன்ற கட்டிட வடிவமைப்புகளை செய்து கொடுத்துள்ளது.

    இந்த நிலையில் ‘நாரிமன் பாஸ்டர்’ நிறுவனம் அமராவதி தலைநகரத்துக்கான வடிவமைப்புகளை சந்திரபாபு நாயுடுவிடம் ஒப்படைத்தது. ஆனால் அதிலும் அவருக்கு முழு திருப்தி ஏற்பட வில்லை. தலைநகரின் வெளிதோற்றம் பாகுபலி படத்தின் அரண்மனை போன்று இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

    இதையடுத்து இயக்குனர் ராஜமவுலியை மீண்டும் அழைத்து ஆலோசனை கேட்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கு ராஜமவுலி ஒத்துக்கொண்டால் அவரது தலைமையில் அதிகாரிகள் குழுவை லண்டனில் உள்ள ‘நாரிமன் பாஸ்டர்’ நிறுவனத்திற்கு நேரிடையாக அனுப்பி அந்த நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளார்.
    Next Story
    ×