என் மலர்

    சினிமா

    `இறுதிச்சுற்று திரைப்படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்
    X

    `இறுதிச்சுற்று' திரைப்படத்திற்கு கிடைத்த புதிய கவுரவம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சுதா கொங்காரா இயக்கத்தில் மாதவன் - ரித்திகா சிங் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற `இறுதிச்சுற்று' திரைப்படத்திற்கு புதிய கவுரவம் ஒன்று கிடைத்துள்ளது.
    புதுவை அரசின் சார்பில் ஆண்டு தோறும் சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்படுகிறது.

    2016-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக நடிகர் மாதவன் நடித்த `இறுதிச்சுற்று'  திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா மற்றும் இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு புதுவை அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் நடக்கிறது.

    புதுவை அரசின் செய்தி விளம்பர துறை, நவதர்‌ஷன் திரைப்பட கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து நடத்தும் திரைப் பட விழா இன்று தொடங்கி 12-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    திரைப்பட விழாவை முதல்-அமைச்சர் நாராயண சாமி தொடங்கி வைத்து `இறுதிச்சுற்று'  திரைப்பட இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை வழங்குகிறார்.



    விழாவில் முதல்- அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. செய்தி விளம்பர துறை செயலாளர் பார்த்திபன், நவதர்‌ஷன் திரைப்பட கழக செயலாளர் பழனி, அலையன்ஸ் பிரான்சேஸ் தலைவர் லலித் வர்மா ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    விழாவை தொடர்ந்து `இறுதிச்சுற்று'  திரைப்படம் திரையிடப்படுகிறது. மேலும் விழா நடைபெறும் நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் இலவசமாக பொதுமக்கள் பார்க்க திரைப்படம் திரையிடப்படுகிறது.

    நாளை (சனிக்கிழமை) சித்ரோகர் பெங்காலி திரைப்படமும், நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காடு பூக்குன்ன நேரம் மலையாள படமும், 11-ந் தேதி ஏர்லிப்ட் இந்தி படமும், 12-ந் தேதி யூ-டர்ன் கன்னட திரைப்படமும் திரையிடப்படுகிறது.

    Next Story
    ×