என் மலர்

    சினிமா

    நித்யானந்தா வீடியோ விவகாரம்: மறு விசாரணை நடத்தக்கோரி ரஞ்சிதா ஐகோர்ட்டில் வழக்கு
    X

    நித்யானந்தா வீடியோ விவகாரம்: மறு விசாரணை நடத்தக்கோரி ரஞ்சிதா ஐகோர்ட்டில் வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நித்யானந்தா வீடியோ விவகாரத்தில் மறு விசாரணை நடத்தவேண்டும் என்று ரஞ்சிதா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
    நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோர் ஒன்றாக இருக்கும் ஒரு வீடியோ காட்சி தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2010ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

    இதையடுத்து நித்யானந்தா தியான பீடத்தின் நிர்வாகி, சென்னை பாண்டிபஜார் போலீசில் புகார் செய்தார். இந்த வீடியோ காட்சியை காட்டி தங்களிடம் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அந்த வீடியோ நவீன தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதில், ஸ்ரீதர், லெனின், ஐய்யப்பன், ஆர்த்தி ராவ் உள்பட பலரை குற்றவாளியாக சேர்த்திருந்தனர். பின்னர் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு சைதாப்பேட்டை 11வது குற்றவியல் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நடிகை ரஞ்சிதா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், சி.பி.சி.ஐ.டி. போலீசார், வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஆர்த்திராவ், இமெயிலை சரிவர ஆய்வு செய்யவில்லை. அவர் வினய் பரத்வாஜ் என்பவருடன் சேர்ந்து கூட்டுச் சதி செய்துள்ளார். இதற்காக இருவரிடையே நடந்த இமெயில் தொடர்பை ஆய்வு செய்யவேண்டும். மேலும், நித்யானந்தா மீது ஆர்த்திராவ் தொடர்ந்த வழக்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. அங்குள்ள அசல் வீடியோ காட்சியை போலீசார் பெறவில்லை. நகல் வீடியோ காட்சியை வைத்து தான் சைதாப்பேட்டை கோர்ட்டு விசாரித்துள்ளது. எனவே, இந்த வழக்கை மறு விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. ரஞ்சிதா சார்பில் வக்கீல் இளையராஜா ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த மனுவுக்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தார்.
    Next Story
    ×