என் மலர்

    சினிமா

    ‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காலா உள்ளிட்ட 40 சினிமா படப்பிடிப்புகள் ரத்து
    X

    ‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: காலா உள்ளிட்ட 40 சினிமா படப்பிடிப்புகள் ரத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பெப்சி’ தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 40 சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. ரஜினிகாந்த் நடித்து வரும் ‘காலா’ படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது. பெப்சிக்கு போட்டியாக தயாரிப்பாளர்கள் சங்கம் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுத்து திரைப்பட தொழிலில் ஈடுபடுத்த முயற்சி செய்வதாக கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    வேலைக்கு புதிதாக ஆட்கள் எடுக்கும் முடிவை தயாரிப்பாளர்கள் சங்கம் திரும்ப பெறுவதுவரை இந்த வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்து உள்ளனர். பெப்சி வேலை நிறுத்தம் காரணமாக சென்னையிலும் வெளியூர்களிலும் நடந்து வந்த சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

    ‘பெப்சி’யில் கேமராமேன்கள், லைட்மேன்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்கள், ஸ்டண்ட் இயக்குனர்கள், மேக்கப்மேன்கள், டான்ஸ் மாஸ்டர்கள், தயாரிப்பு மேற்பார்வையாளர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், கலை இயக்குனர்கள் உள்ளிட்ட பிரிவினரை உள்ளடக்கிய 23 சங்கங்கள் உள்ளன. இவர்கள் அனைவரும் நேற்று படப்பிடிப்புகளையும் டப்பிங், ரீரிக்கார்டிங், கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகளையும் புறக்கணித்தனர்.



    தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த 40 சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பெப்சி தரப்பில் கூறப்பட்டது. ரஜினிகாந்த் நடித்து வரும் காலா, விஜய்யின் மெர்சல், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களின் படப்பிடிப்புகளும் நடக்கவில்லை.

    ரஜினிகாந்தின் ‘2.0’ படத்தின் தொழில் நுட்ப பணிகளும் நிறுத்தப்பட்டன.

    இதுகுறித்து பெப்சி பொதுச்செயலாளர் அங்கமுத்து சண்முகம் கூறும்போது, “பெப்சியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். 10 ஆயிரம் பேர் அன்றாட சினிமா பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்ததால் 40-க்கும் மேற்பட்ட சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு விட்டன. இதனால் ஒரு நாளைக்கு சுமார் ரூ.1 கோடி சம்பள இழப்பு ஏற்பட்டு உள்ளது. வருகிற 5-ந் தேதி பெப்சி தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள். கோரிக்கை நிறைவேறும்வரை வேலைநிறுத்தம் தொடரும்” என்றார்.
    Next Story
    ×