என் மலர்

    சினிமா

    விஷால் அரசியலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்: டிடிவி தினகரன்
    X

    விஷால் அரசியலுக்கு வந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்: டிடிவி தினகரன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விஷால் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யாக்கும் க்ரிதிஷ்க்கும் கடந்த 27ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுமண தம்பதியருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.


    இந்நிலையில், அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று விஷால் மற்றும் அவரின் தங்கை ஐஸ்வர்யா-க்ரிதிஷ் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். அதன்பின் பேசிய டிடிவி தினகரன், ‘விஷாலுக்கு தலைமைப் பண்பு உள்ளது. சகோதரர் விஷால் அரசியலுக்கு வந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.
    Next Story
    ×