என் மலர்

    சினிமா

    அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் `2.0 ரிலீஸ் உரிமை
    X

    அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் `2.0' ரிலீஸ் உரிமை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் விநியோக உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.
    ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0'. லைகா புரடொக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய்குமார் வில்லனாகவும், எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

    இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.



    இந்த படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், `2.0' படத்தின் ரிலீஸ் உரிமையை குளோபல் சினிமா ரூ.81 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. எந்திரன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் ரூ.27 கோடிக்கு விலை போயிருந்தது.

    ஏற்கனவே `2.0' படத்தின் தொலைக்காட்சி உரிமை ரூ.110 கோடிக்கு விலைபோனதாக தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
    Next Story
    ×