என் மலர்

    சினிமா

    இளைஞர்கள் ரசிக்கும் கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்: `குப்பத்து ராஜா தயாரிப்பாளர்
    X

    இளைஞர்கள் ரசிக்கும் கதாநாயகனாக உருவாகியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்: `குப்பத்து ராஜா' தயாரிப்பாளர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இளைஞர்கள் ரசிக்கும் கதாநாயகனாக ஜி.வி.பிரகாஷ் உருவாகி வருவதாக அவர் நடித்து வரும் `குப்பத்து ராஜா' படத்தின் தயாரிப்பாளர் கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ் குமார். அவர் தற்போது, `ஐங்கரன்', `4ஜி', `அடங்காதே', `செம', `குப்பத்து ராஜா', `நாச்சியார்', `100% காதல்', `சர்வம் தாள மயம்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    அதுமட்டுமில்லாமல் சசி இயக்கத்தில் சித்தார்த் உடன் இணைந்து ஒரு படத்திலும், வெற்றிமாறன்  இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க உள்ளார்.

    இதில், நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்து வந்த `குப்பத்து ராஜா' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



    இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பூனம் பாஜ்வா, பல்லக் லால்வானி நடித்துள்ளனர். பார்த்திபன், எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை 'எஸ் போக்கஸ்'  சார்பில் எம்.சரவணன், எஸ்.சிராஜ் மற்றும் டி.சரவணன் இந்த படத்தை தயாரித்துள்ளனர். படம் குறித்து தயாரிப்பாளர்கள் பேசியபோது,

    ``சினிமா ரசிகர்களின் ரசனையை பலகாலமாக விநியோகஸ்தர்களாக இருந்து கண்டறிந்ததால் சினிமா தயாரிப்பில் கால் எடுத்துவைக்க முடிவு செய்தோம். தயாரிப்பாளர்களின் விருப்பமாகவும் இன்றைய இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்படும் கதாநாயகனாகவும் இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். அவரது கதாநாயகன் அந்தஸ்து கூடி வருவதை எல்லோரும் காணலாம். 'குப்பத்து ராஜா' படத்தின் கதையை பாபா பாஸ்கர் எங்களிடம் கூறியபோது ஆச்சிரியப்பட்டோம். பிரபல நடனமாசிரியரான அவருக்குள் இப்படி ஒரு திறமையான  இயக்குனர் இருக்கிறார் என்பது அப்போது தான் தெரிந்தது. அவரது படமாக்கும் முறையும் எங்களை மிகவும் கவர்ந்தது. ரஜினி சாரின் வெற்றி தலைப்பு என்பதால் மட்டுமில்லாமல் இக்கதைக்கும் மிக சரியாக பொருந்துவதால் 'குப்பத்து ராஜா' தலைப்பை சூட்டினோம்". இவ்வாறு கூறினார்.

    வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் படம் ரிலீசாக இருக்கிறது.

    Next Story
    ×