என் மலர்

    சினிமா

    `கபாலி படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் `விவேகம்
    X

    `கபாலி' படத்தின் சாதனையை முறியடித்த அஜித்தின் `விவேகம்'

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் `கபாலி' படத்தின் சாதனையை முறியடித்திருக்கிறது.
    சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் - அக்‌ஷரா ஹாசன் - விவேக் ஒபராய் நடிப்பில் வெளியாகியிருக்கும் `விவேகம்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

    பலவித விமர்சனங்களுக்கு மத்தியில் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் முதல்நாள் வசூலிலும் புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது. ரஜினி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `கபாலி' படத்தின் முதல்நாள் சாதனையை `விவேகம்' படம் முறியடித்திருக்கிறது.

    சென்னையில் `கபாலி' படம் முதல் நாளில் ரூ.1.12 கோடி வசூலித்து முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், `விவேகம்' படம் ரூ.1.21 கோடியை வசூலித்து அந்த சாதனையை முறியடித்திருக்கிறது. விஜய்யின் தெறி ரூ.1.05 கோடியுடன் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.



    கேரளாவில் மட்டும் முதல்நாள் வசூலாக ரூ.2.90 கோடியை `விவேகம்' படம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் கிட்டத்தட்ட ரூ.2 கோடி வசூலித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    தமிழகத்தில் மொத்தமாக ரூ.16.20 கோடியும், இந்தியா முழுக்க ரூ.25.83 கோடியை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

    அமெரிக்காவில் ரூ.1.38 கோடியை `விவேகம்' படம் வசூலித்திருப்பதாகவும், இது விஜய்யின் `பைரவா' வசூலை விட குறைவே என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    Next Story
    ×