என் மலர்

    சினிமா

    நிரம்பி வழியும் திரையரங்குகள்: `விவேகம் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!
    X

    நிரம்பி வழியும் திரையரங்குகள்: `விவேகம்' கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள்!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிவா இயக்கத்தில் அஜித் - காஜல் அகர்வால் நடிப்பில் வெளியாகி இருக்கும் `விவேகம்' படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்திருப்பதால் திரையரங்குகள் முழுவதும் நிரம்பி வழிகிறது.
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியாக இருக்கும் படம் `விவேகம்'.

    சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் படத்திற்கு முதல் நாளான இன்று நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இரவு முழுவதும் அஜித் ரசிகர்கள் கண்விழித்துக் கொண்டு ஆவலுடன் படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர்.



    ஜி.எஸ்.டி, மாநில என பல வரிகளுடன் அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டாலும் அதனை பொருட்படுத்தாமல் திரையரங்குகளில் ரசிகர் கூட்டம் அலைமோதி வருகிறது.

    படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்திருக்கிறார். சிறப்புக் காட்சிகள் பார்த்தவர்களிடம் இருந்து நல்ல விமர்சனங்களே வருவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
    Next Story
    ×