என் மலர்

    சினிமா

    என்னை தெரியாது என்று காவ்யா மாதவன் கூறியது பொய்: பல்சர் சுனில்
    X

    என்னை தெரியாது என்று காவ்யா மாதவன் கூறியது பொய்: பல்சர் சுனில்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தன்னை தெரியாது என்று காவ்யா மாதவன் கூறியது பொய் என்று நடிகை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனில் கூறியிருக்கிறார்.
    பிரபல நடிகை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பபட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அங்கமாலி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடிகர் திலீப்பை போலீசார் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் கோர்ட்டுக்கு கொண்டு வரும் போது திலீப்புக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று போலீசார் கருதியதால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரிக்க மாஜிஸ்திரேட்டிடம் போலீசார் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு வீடியோ கான்பிரன்ஸ் மூலம் வழக்கை விசாரித்தார்.

    இதைத்தொடர்ந்து நடிகர் திலீப்பின் காவலை வருகிற 2-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.



    இதற்கிடையில் நடிகர் திலீப் தாக்கல் செய்து இருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது திலீப் தரப்பில் ஆஜரான வக்கீல் ராமன் பிள்ளை வாதாடும்போது பல வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியான பல்சர் சுனில் கூறுவதை நம்ப முடியாது. சுனிலுக்கு திலீப் பணம் கொடுக்கவில்லை. திலீப்பை இந்த சதிவலையில் சிக்க வைக்க மலையாள பட உலகை சேர்ந்த சிலர் திட்டமிட்டுள்ளனர். புகார் கூறப்பட்ட நடிகைக்கும் பல்சர் சுனிலுக்கும் ஏற்கனவே பழக்கம் உண்டு. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறால் இந்த கடத்தல் நடந்து இருக்கலாம். எனவே திலீப்புக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் வாதாடினார்.

    திலீப்புக்கு ஜாமீன் வழங்க அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் பிற்பகலிலும் இந்த விசாரணை தொடர்ந்தது. அதன்பிறகு திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணையை மாஜிஸ்திரேட்டு தள்ளி வைத்தார். இதனால் இன்றும் திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை 2-வது நாளாக நடைபெற உள்ளது.



    இதற்கிடையில் நடிகை கடத்தல் வழக்கில் முதல் குற்றவாளியான பல்சர் சுனிலை ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக குன்னம்குளம் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அதன்பிறகு பல்சர் சுனிலை மீண்டும் கோர்ட்டில் இருந்து போலீசார் வெளியே அழைத்து வந்த போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது என்னை தெரியாது என்று காவ்யா மாதவன் கூறியது பொய். அவருக்கு என்னை நன்றாக தெரியும். அவரிடம் இருந்து பல முறை பணம் வாங்கி உள்ளேன். ஆனால் காவ்யா மாதவனுக்கும் நடிகை கடத்தல் சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×