என் மலர்

    சினிமா

    ஸ்டண்டு யூனியன் பொன்விழா: நடிகர் சங்கம் வாழ்த்து
    X

    ஸ்டண்டு யூனியன் பொன்விழா: நடிகர் சங்கம் வாழ்த்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    வருகிற 26-ஆம் தேதி ஸ்டண்டு யூனியன் சார்பில் பொன்விழா நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
    தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை ஸ்டண்டு யூனியன் 50-ம் ஆண்டு பொன்விழா ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நடிகர் சங்கம் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,

    ``தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குநர்கள் மற்றும் சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    இந்த விழாவுக்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்றை படப்பிடிப்பை ரத்து செய்துள்ளது. நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு ஸ்டண்டு யூனியன் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர். எனவே அந்த கோரிக்கையை ஏற்று மூத்த நடிகர், நடிகைகளும் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் இவ்விழா சிறப்பாக அமைய தென்னிந்திய நடிகம் சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது."

    இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டிருந்தது.

    Next Story
    ×