என் மலர்

    சினிமா

    அல்வா வாசு மகளின் படிப்பு செலவுக்கு உதவிய விஷால்
    X

    அல்வா வாசு மகளின் படிப்பு செலவுக்கு உதவிய விஷால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்த அல்வா வாசு கல்லீரல் பாதிப்பு காரணமாக சில தினங்களுக்கு முன்பு காலமானார். இவரது மகளின் படிப்பு செலவிற்கு விஷால் உதவி செய்துள்ளார்.
    தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்கள், குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அல்வா வாசு. இவர் இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர நடிகரானார். `அமைதிப்படை', ரஜினிகாந்தின் `அருணாச்சலம்', `சிவாஜி', நடிகர் சத்யராஜ் உள்பட பல நடிகர்களின் படங்களில் இவர் நடித்த காட்சிகள் பிரபலம்.

    சில மாதங்களுக்கு முன்பு அல்வா வாசு கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மி‌ஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 மாதங்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவர்கள் அவருக்கு அளித்த சிகிச்சையால் பலன் கிடைக்கவில்லை. இதனால் சில தினங்களுக்கு முன்பு காலமானார். நடிகர் அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நடிகர் விஷால், தனது தேவி அறக்கட்டளை சார்பாக அல்வா வாசு மகள் கிருஷ்ண ஜெயந்திகாவின் படிப்பு செலவிற்கு ரூபாய் 1 லட்சம் பண உதவி வழங்கியுள்ளார்.
    Next Story
    ×