என் மலர்

    சினிமா

    ஜூலி, சக்தி மீது மோசமான தாக்குதல் வேண்டாம்: காரணம் என்ன? சொல்கிறார் ஓவியா
    X

    ஜூலி, சக்தி மீது மோசமான தாக்குதல் வேண்டாம்: காரணம் என்ன? சொல்கிறார் ஓவியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை வேண்டா வெறுப்பாக நடத்திய ஜுலி, சக்தி மீது மோசமான தாக்குதல்களை தனது ரசிகர்கள் நடத்த வேண்டாம் என கூறியுள்ள ஓவியா அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னை வேண்டா வெறுப்பாக நடத்திய ஜுலி, சக்தி மீது மோசமான தாக்குதல்களை தனது ரசிகர்கள் நடத்த வேண்டாம் என கூறியுள்ள ஓவியா அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளார்

    பிரபலங்களை வெளியுலக தொடர்பு இல்லாமல் 100 நாட்கள் வீட்டுக்குள் அடைத்து வைத்து ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை தனியார் டெலிவிஷனில் நடிகர் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், வையாபுரி, சக்தி, பரணி, கஞ்சா கருப்பு, ஸ்ரீ, ஆரவ், கவிஞர் சினேகன், நடிகைகள் நமீதா, ஓவியா, அனுயா, காயத்ரி ரகுராம், ரைசா, ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோர் இதில் பங்கேற்று வந்தனர்.



    வாராவாரம் ஒவ்வொரு பிரபலமும் வெளியேறி வந்த நிலையில், நடிகை ஓவியா தினமும் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாட்டமாக இருந்தார். ஒரு கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஓவியாவுக்கு எதிராக மாறினார்கள். குறிப்பாக ஜூலி, காயத்ரி, சக்தி ஆகியோர் ஓவியாவை கடுமையாக எதிர்த்தும், விமர்சித்தும் வந்தனர்.



    இதனால், நிகழ்ச்சியில் ஓவியா எப்போதும் தனிமையிலேயே இருந்து வந்தார். ஓவியாவை தொடர்ந்து கடுமையாக சாடிவந்த ஜூலி, காயத்ரி மற்றும் சக்தி ஆகியோர் மீது நிகழ்ச்சி பார்வையாளர்கள் மற்றும் ஓவியா ரசிகர்களால் சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிக்கப்பட்டனர்.

    மேற்கண்ட மூவருக்கும் எதிராக மீம்ஸ்கள் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் வைரலாக பரவின. தற்போது, ஓவியா நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், ரசிகர்கள் ஜூலி, சக்தியை விமர்சிப்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கொச்சியில் உள்ள தனது இல்லத்திலிருந்து வீடியோ மூலமாக அவர் கூறியுள்ளதாவது, ”ரொம்ப கஷ்டமான விஷயம் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது. ஜூலி மற்றும் சக்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விட்டனர். அந்த நிகழ்ச்சியில் என்னை மற்றவர்கள் ஒதுக்கிய போது நான் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டேனோ, அதேபோல ஒரு நிலை தற்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, தயவுசெய்து அவர்கள் மீது மோசமான கருத்துக்களை முன்வைக்காதீர்கள். அது என்னுடைய மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

    தவறு எல்லோரும் தான் செய்கிறோம். யாரும் இங்கு சரியாக இல்லை, நான் உள்பட. தவறு செய்தால் தான் மனிதர்கள், இல்லையெனில் அவர்கள் விலங்குகளுக்கு சமம். கொலை, கற்பழிப்பு குற்றவாளிகளை கூட அரசாங்கமே மன்னித்து விடுகிறது. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தவை எல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லை. அவர்களை தொல்லை செய்யாதீர்கள். நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு எனக்கு புரிகிறது. ஆனால், மற்றவர்களை கஷ்டப்படுத்தி என்னிடம் அன்பு காட்ட வேண்டாம். அப்படிபட்ட ரசிகர்கள் எனக்கு தேவையில்லை” என ஓவியா அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
    Next Story
    ×