என் மலர்

    சினிமா

    மூத்த நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்
    X

    மூத்த நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
    `கரகாட்டக்காரன்', `சென்னை 600028' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல குணச்சித்திர நடிகர் சண்முகசுந்தரம் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

    சிவாஜி கணேசன் நடிப்பில் கடந்த 1963-ஆம் ஆண்டு வெளியான `
    ரத திலகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சண்முகசுந்தரம். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த `கர்ணன்', `தசாவதாரம்' உள்ளிட்ட பல படங்கள் அவருக்கு பெயர் சொல்லும் படங்களாக அமைந்தன.

    அதிலும் `கரகாட்டக்காரன்' படத்தில் அவரது நடிப்பும், வசன உச்சரிப்பும் அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்ததுடன் குணச்சித்திர நடிகராக அவரது சினிமா பயணத்துக்கு வழிசெய்தது. சமீபத்தில் கூட `தமிழ் படம்', `சென்னை 600028' முதல் பாகம், இரண்டாவது பாகம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சிம்பு நடித்த `அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

    அதுமட்டுமல்லாமல், `அண்ணாமலை', `செல்வி', `அரசி', `வம்சம்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அவரது உடல் சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்த வைக்கபட்டுள்ளது.

    Next Story
    ×