என் மலர்

    சினிமா

    பெண்கள் அமைப்பே தேவையில்லை: நடிகை சுவேதா மேனன்
    X

    பெண்கள் அமைப்பே தேவையில்லை: நடிகை சுவேதா மேனன்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் அமைப்பு தேவையில்லை என்றும், தனது பாதுகாப்பை தானே உறுதி செய்து கொள்வேன் என்றும் நடிகை சுவேதா மேனன் கூறியிருக்கிறார்.
    கேரளாவில் நடிகை கடத்தப்பட்டு பாலியல் சித்ரவதை செய்யப்பட்டார். இதையடுத்து, அங்குள்ள சினிமா நடிகைகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள் இணைந்து டபிள்யூ. சி.சி. என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறார்கள்.

    இதில் மஞ்சுவாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்பட பல முன்னணி நடிகைகள் இணைந்துள்ளனர். இதன் மூலம் பெண் உறுப்பினர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுக்கவும் முடிவு செய்து இருக்கிறார்கள்.

    ஆனால் சுவேதா மேனன், ‘கள்ளபடம்’ லட்சுமிபிரியா உள்பட சிலர் இதில் சேரவில்லை. இந்த அமைப்பு தேவை இல்லை என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்றி கூறிய சுவேதா மேனன்..

    “ எனக்கு இந்த பெண்கள் நல அமைப்பின் உதவி தேவை இல்லை. என் பாதுகாப்பை நானே உறுதி செய்து கொள்வேன். மேலும், மலையாள நடிகர் சங்கம் எந்த நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×