என் மலர்

    சினிமா

    நடிகை கடத்தல் வழக்கு: திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு
    X

    நடிகை கடத்தல் வழக்கு: திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நடிகை கடத்தல் வழக்கில் ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    கேரளாவில் ஓடும் காரில் நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஆலுவா ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    நேற்றுடன் நடிகர் திலீப் ஜெயிலில் அடைக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துவிட்டது. ஏற்கனவே தனக்கு ஜாமீன் கேட்டு நடிகர் திலீப் தாக்கல் செய்ய மனுக்களை அங்கமாலி கோர்ட்டும், கேரள ஐகோர்ட்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டன.

    இந்த நிலையில் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் நடிகர் திலீப் சார்பில் நேற்று ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

    திலீப்பின் ஜாமீன் மனுவை மூத்த வக்கீலான ராமன்பிள்ளை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-



    நடிகை கடத்தல் சம்பவத்திற்கும் திலீப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. சினிமா உலகிலும், அரசியல், சமூக ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்கள் தொடர்ந்து திலீப்புக்கு எதிராக பொய் பிரசாரம் செய்து அவரை குற்றவாளியாக சித்தரித்துவிட்டனர். திலீப் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்.

    அவருக்கு இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலை பற்றி எதுவும் தெரியாது. அவரை பார்த்தது கூட கிடையாது. அவரது முகம்கூட தெரியாது. எந்த சந்தர்ப்பத்திலும் திலீப் அவரை சந்தித்ததும் இல்லை. சுனில் திலீப்பை பொய் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளனர். அவரது ஜாமீனை தடுக்க முயற்சிக்கவே இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

    திலீப் ஜெயிலில் இருப்பதால் அவர் நடிக்க வேண்டிய பல படங்களின் படப்பிடிப்பு தடைபட்டு பாதியில் நிற்கிறது. இதனால் ரூ.50 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் திலீப் மீது அன்பு வைத்துள்ள மக்களுக்கும் மனவேதனை ஏற்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    திலீப் ஜாமீன் மனு மீதான விசாரணை கேரள ஐகோர்ட்டில் இன்று நடைபெற்றது.

    ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனு மீதான விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
    Next Story
    ×