என் மலர்

    சினிமா

    நல்ல தலைமை அமைந்தால் தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும்: நடிகர் ஜீவா பேச்சு
    X

    நல்ல தலைமை அமைந்தால் தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும்: நடிகர் ஜீவா பேச்சு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும் என்று நம்ம விவசாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசினார்.
    நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிப்பில் ‘நம்ம விவசாயம்‘ என்ற பாடல் மற்றும் காட்சி தொகுப்பு உருவாகி உள்ளது. இதை அன்பரசன் இயக்கி உள்ளார். சி.சத்யா இசையமைத் திருக்கும் இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

    இதில் பேசிய நடிகர் ஜீவா, “நம்ம விவசாயம் விழிப்புணர்வு நிகழ்வு பாராட்டப்பட வேண்டிய வி‌ஷயம். விவசாயம் இணையத்தில் இளைஞர்கள் மூலம் அதிகம் விவாதிக்கப்படுகிறது. விவசாயத்தை தனியாக காப்பாற்ற முடியாது. நல்ல தலைமை அமைந்தால் தான் மாற்ற முடியும். விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்கள் நேரடியாக மக்களிடம் போய் சேர வேண்டும். விவசாயமும் சினிமாவும் கூட ஒரே நிலையில் தான் இருக்கின்றன. சரியான கட்டமைப்பு இல்லை. இரண்டிலுமே இடைத்தரகர்கள் தான் பயனடைகிறார்கள்” என்றார்.



    இயக்குனர் அன்பரசன் பேசும் போது...

    அரசாங்கம் செய்ய வேண்டிய மிகப்பெரிய வேலையை ஆர்.கே மற்றும் 4 பேர் சேர்ந்து செய்ய இருக்கிறார்கள். 65 நாட்கள் விவசாயிகள், மற்ற துறையினர், பிரபலங்களை ஒரு இடத்தில் அடைத்து வைத்து விவசாயம் பற்றிய ஒரு நிகழ்வை செய்ய இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

    நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் சத்யா, பாடல் ஆசிரியர் கிருதயா,அம்மா கிரியே‌ஷன் சிவா, ‌ஷங்கர், ஒளிப்பதிவாளர் மோகன், இயக்குனர் சதீஷ், எடிட்டர் கேசவன், பாடகர் செந்தில்தாஸ் மற்றும் நடிகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×