என் மலர்

    சினிமா

    `தல அஜித்தின் கடின உழைப்புக்கும், அவரது ரசிகர்களின் அன்புக்கும் முக்கியமான நாள் இன்று!
    X

    `தல' அஜித்தின் கடின உழைப்புக்கும், அவரது ரசிகர்களின் அன்புக்கும் முக்கியமான நாள் இன்று!

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    `தல' அஜித்தின் கடின உழைப்புக்கும், அவரது ரசிகர்களின் அன்புக்கும் முக்கியமான நாளாக இன்று விளங்குகிறது. அத்துடன் அந்த வெற்றிப் பயணம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்களும் உள்ளது.
    ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி என்பது அஜித்துக்கும், அவரது ரசிகர்களுக்கும் முக்கியமான நாள். இதே நாளில் கடந்த 1992-ஆம் ஆண்டு தல அஜித் `பிரேம புஸ்தகம்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்த வைத்தார். அதைத் தொடர்ந்து 1993-ல் `அமராவதி' என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அவருக்கென்றே ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது. ரசிகர்கள் அவரை `தல' என்று செல்லமாக அழைக்கவும் தொடங்கினர்.

    தென்னிந்திய சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, பாலிவுட் பிரபலங்கள் பலரும் அஜித்தை ஒரு முன்மாதிரியாகவே எடுத்துக் கொண்டு அவரை பின்பற்றுகின்றனர். அதற்கேற்றாற் போல் தனது எளிமை, கடின உழைப்பின் மூலம் பலருக்கும் உத்வேகம் அளித்திருக்கிறார் என்று பல பிரபலங்கள் பொது மேடைகளிலேயே தெரிவித்திருக்கின்றனர். அவரது சினிமா வாழ்க்கையில் வெற்றிகளும், தோல்விகளும் மாறி மாறி வந்தாலும், ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைத்ததால், தனது உழைப்பின் மூலம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்றார். ரசிகர்களின் இதயங்களையும் தொடர்ந்து வென்று வருகிறார்.



    சினிமாவில் நடித்து வந்தாலும், கார், பைக் மீது உள்ள அதீத ஆர்வத்தினால், பல போட்டிகளில் பங்கேற்றிருக்கும் அவருக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல காயங்கள் ஏற்பட்டிருக்கிறது. எனினும் அதிலெல்லாம் பொருட்படுத்தாமல், அதிலேயே துவண்டு விடாமல் தொடர்ந்து போராடி தற்போது சினிமாவில் தனது 25 வருடத்தை நிறைவு செய்து நிமிர்ந்து நிற்கிறார்.

    இதுவரை 57 படங்களில் நடித்துள்ள அஜித் நடிப்பில் தற்போது `விவேகம்' படம் தயாராகியிருக்கிறது. ஹாலிவுட் தரத்தில் ஆக்‌ஷன் படமாக உருவாகியிருக்கும் `விவேகம்' வருகிற ஆகஸ்ட் 24-ஆம் தேதி உலகமெங்கும் பிரமாண்டமாக ரிலீசாகிறது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் தல ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு எகிறியிருக்கிறது.



    மேலும் அஜித்தின் 25 வருட சினிமா வரலாற்றை கொண்டாடும் விதமாக, கும்பகோணத்தில் நடிகர் அஜித்குமாருக்கு அவரது ரசிகர்கள் சார்பில் ரூ.1 லட்சம் செலவில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
     
    நாளை நடைபெறவுள்ள சிலை திறப்பு விழாவையொட்டி ரத்ததானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் செய்ய இருப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    அஜித்துக்கு சிலை திறக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    ரசிகர்களின் மனதை பூர்த்தி செய்வதற்காக தல அஜித், ஸ்டண்ட் காட்சிகளில் டூப் இல்லாமல், தனது சொந்த உழைப்பாலேயே களமிறங்குவார் என்பது நாம் அறிந்ததே. ஆனால் இனி வரும் படங்களில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தல ஸ்டண்ட் காட்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. தலயின் இந்த 25 வருட வெற்றிப்பயணம் மென்மேலும் சிறக்க மாலைமலர் சார்பாகவும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
    Next Story
    ×