என் மலர்

    சினிமா

    `விவேகம் ரிலீஸ் நாளுக்கும், அஜித்தின் வெற்றிக்கும் இடையேயான தொடர்பு
    X

    `விவேகம்' ரிலீஸ் நாளுக்கும், அஜித்தின் வெற்றிக்கும் இடையேயான தொடர்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் ``விவேகம்'' படத்தின் ரிலீஸ் தேதிக்கும் அஜித்தின் வெற்றிக்கும் சம்பந்தப்பட்ட ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.
    `விவேகம்' படத்தின் தணிக்கைக்குழு சான்றிதழ் மற்றும் ரிலீஸ் தேதி தான் டுவிட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித், காஜல் அகர்வால் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகியிருக்கும் `விவேகம்' படத்திற்கு தணிக்கைக் குழு `யு/ஏ' சான்றிதழை வழங்கியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து படம் வருகிற 24-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

    சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாய் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன், பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



    `விவேகம்' படத்தின் ரிலீஸ் தேதிக்கும், அஜித்தின் வெற்றிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அது என்னவென்றால், `விவேகம்' படம் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக தல அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான `மங்காத்தா' படமும் விநாயகர் சதுர்த்திக்கு ஒருநாள் முன்பாக (ஆகஸ்ட் 31-ம் தேதி) ரிலீஸ் ஆகி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் `விவேகம்' படமும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான கொண்டாட்டங்களை அஜித் ரசிகர்கள் தற்போதே தொடங்கிவிட்டனர்.

    Next Story
    ×