என் மலர்

    சினிமா

    மாற்றத்துக்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்: கமல்ஹாசனுக்கு குஷ்பு ஆதரவு
    X

    மாற்றத்துக்கான உங்கள் போராட்டம் தொடரட்டும்: கமல்ஹாசனுக்கு குஷ்பு ஆதரவு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    டுவிட்டரில் அரசியல் கருத்துகளை வெளியிட்டு வரும் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்து உள்ளார்.
    நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக கடுமையான அரசியல் கருத்துகளை டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து இருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டி உள்ளார். கமல்ஹாசனின் அரசியல் கருத்துகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலும் கமல்ஹாசனுக்கு துணையாக இருப்போம் என்று அறிவித்து இருக்கிறார்.

    தற்போது நடிகை குஷ்புவும் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    சமீபத்தில் அவர் டுவிட்டரில் இருந்து விலகிவிட்டதால் ‘பேஸ்புக்’ பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். அதில் குஷ்பு கூறியிருப்பதாவது:-

    “எனது நண்பரே, உங்கள் கருத்தில் நீங்கள் உறுதியாக இருங்கள். நான் உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். சிறுசிறு அமைப்பினரும், வீழ்ந்து வரும் அரசியல் தரப்பினரும் 2 நிமிட புகழ் வெளிச்சத்துக்காக உங்கள் தோள் மீது ஏறி சவாரி செய்ய நினைக்கிறார்கள். உங்கள் நிலையில் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்கள். உங்கள் பக்கம் நான் இருக்கிறேன். எனது ஆதரவும் அன்பும் உங்களுக்கு உண்டு.

    சிறந்த மாற்றத்துக்கான உங்கள் போராட்டம் தொடர வேண்டும். அதை தடுக்கிற எதையும் அனுமதிக்க வேண்டாம்”.

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
    Next Story
    ×