என் மலர்

    சினிமா

    போதைபொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வந்த நடிகை முமைத்கான்.
    X
    போதைபொருள் வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வந்த நடிகை முமைத்கான்.

    போதை பொருள் விவகாரம்: முமைத்கானிடம் 6 மணி நேரம் விசாரணை - ரவிதேஜா இன்று ஆஜர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போதை பொருள் வழக்கில் பெண் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரான நடிகை முமைத்கானிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
    தெலுங்கு பட உலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் நடிகர்-நடிகைகள் பலருடன் தொடர்பு இருந்ததாக வாக்குமூலம் அளித்தனர். அவர்கள் வெளியிட்ட பெயர்கள் பட்டியலில் நடிகர்கள் நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

    இந்த 12 பேருக்கும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினார்கள். நவ்தீப், பூரி ஜெகன்னாத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். நடிகை சார்மியும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று முன் தினம் ஆஜரானார். காலை 10 மணியில் இருந்து மாலை 4.45 மணிவரை அவரிடம் விசாரணை நடந்தது.

    தெலுங்கு டெலிவிஷனில் ஒளிபரப்பாகும் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை முமைத்கான், நேற்று முன்தினம் இரவு புனேயில் இருந்து மும்பை வந்து பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.

    பின்னர் அங்குள்ள ஓட்டலில் அவர் தங்கினார். நேற்று காலை காரில் தனது மானேஜருடன் நாம்பள்ளியில் இயங்கி வரும் சிறப்பு புலனாய்வு குழு அலுவலகத்துக்கு சென்றார்.

    முமைத்கான் காரில் இருந்து இறங்கியதும் பெண் காவலர்கள் வந்து அவரை அலுவலகத்துக்குள் அழைத்துச்சென்றனர். சார்மி ஆஜராக வந்தபோது ரசிகர்கள் மற்றும் போலீசார் ஏராளமானோர் திரண்டு நின்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு போலீஸ்காரர் தன்மீது கைபோட்டு செல்பி எடுக்க முயன்றதாக விசாரணை அதிகாரிகளிடம் சார்மி புகார் அளித்து இருந்தார்.



    அதுபோன்ற சம்பவங்கள் நிகழக்கூடாது என்பதற்காக முமைத்கான் வந்தபோது பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ரசிகர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

    முமைத்கானிடம் 4 பெண் அதிகாரிகளை கொண்ட குழு தீவிர விசாரணை நடத்தியது. போதை பொருள் வழக்கில் கைதான முக்கிய குற்றவாளியான கெல்வினும், முமைத்கானும் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம் விசாரணை அதிகாரிகளிடம் சிக்கி உள்ளது. அந்த படத்தை காட்டி குற்றவாளிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்கள்.

    கெல்வினின் செல்போனில், முமைத்கானின் செல்போன் எண் இடம்பெற்று இருப்பதால், அதுபற்றியும் கேட்டனர். முமைத்கானுக்கு போதை மருந்து பழக்கம் உள்ளதா? அப்படி இருந்தால், எப்போதிருந்து அந்த பழக்கம் உள்ளது? என்பதையும் கண்டறிய முயன்றனர்.

    நடிகை சார்மி, தனது ரத்தம், தலைமுடி மற்றும் நக மாதிரியை அளிக்க மறுத்து இருந்தார். ஆனால், முமைத்கானோ அந்த மாதிரிகளை அளிக்க தயாராக இருந்தார். இருப்பினும், இப்போது அவை தேவையில்லை என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.

    6 மணி நேரமாக நீடித்த விசாரணை, மாலை 5 மணியளவில் முடிவடைந்தது.

    இன்று (வெள்ளிக்கிழமை) நடிகர் ரவிதேஜா சிறப்பு புலனாய்வு குழு முன்பு விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×