என் மலர்

    சினிமா

    நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ஆர்.கே.செல்வமணி பேட்டி
    X

    நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்: ஆர்.கே.செல்வமணி பேட்டி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பெப்சி’ தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை, என்று தயாரிப்பாளர்கள் முடிவு எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. ‘நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்’, என்று ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியுள்ளார்.
    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் பட உலகம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. தயாரிப்பாளர்கள் லாபம் பெற ‘பெப்சி’ தொழிலாளர்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். தயாரிப்பாளர்கள் எங்கள் எதிரிகள் இல்லை. அவர்களை முதலாளிகளாகவே பார்க்கிறோம். அனைவரும் ஒரே கப்பலில் பயணிக்கிறோம். யார் தவறு செய்தாலும் கப்பல் மூழ்கி விடும்

    தயாரிப்பு துறையை காப்பாற்றும் பெரும் பொறுப்பு தங்களுக்கு இருக்கிறது என்பதை தொழிலாளர்கள் உணர்ந்து இருக்கிறார்கள். ‘பெப்சி’ தொழிலாளர்களை படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்த மாட்டோம் என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ‘பெப்சி’ உறுப்பினர்களை பற்றி சில குற்றச்சாட்டுகளை தயாரிப்பாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

    சம்பந்தப்பட்டவரை அழைத்துப்பேசி குறைபாடுகளை தவிர்க்கும்படி கூறினோம். தயாரிப்பாளர்கள் பலர் தன்னை மிரட்டியதாக அந்த உறுப்பினர் தெரிவித்தார். ஆனாலும் ‘பெப்சி’ உறுப்பினர்கள் அனைவரும் தவறுக்கு தவறு சரியாகாது என்று அறிவுறுத்தினோம். அவரும் தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.



    விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவரான பிறகு பட அதிபர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்ந்து பல்வேறு சலுகைகளை ‘பெப்சி’ வழங்கி இருக்கிறது. சிறு பட்ஜெட் படங்களுக்கு 40 சதவீதம் சம்பளத்தை குறைத்து இருக்கிறோம். இரவு 10 மணிவரை படப்பிடிப்புகள் இருந்தால் இரண்டு சம்பளம் வாங்கியதை ஒன்றரை சம்பளமாக குறைத்து இருக்கிறோம். அனைத்து படங்களுக்கும் பயணப்படியையும் குறைத்து இருக்கிறோம்.

    சரியான திட்டமிடல், கேரவன் போன்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தல், நடிகர்கள் சம்பளத்தை குறைத்தல் போன்றவை மூலம் 50 சதவீதம் வரை தயாரிப்பு செலவுகளை குறைக்க முடியும். இந்த நிலையில் ‘பெப்சி’ தொழிலாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்து இருப்பது வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.

    தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படங்களுக்கு ரூ.90 கோடி வியாபாரம் உள்ளது. அவர் ரூ.15 கோடிதான் சம்பளம் வாங்குகிறார். தமிழில் ரூ.25 கோடி வியாபாரம் உள்ள ஒரு படத்தின் கதாநாயகன் ரூ.40 கோடி சம்பளம் வாங்குகிறார். இதனால்தான் சினிமா தொழில் பாதிக்கிறது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்.

    இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.
    Next Story
    ×