என் மலர்

    சினிமா

    ‘பெப்சி’ தொழிலாளர்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவோம்: விஷால்
    X

    ‘பெப்சி’ தொழிலாளர்கள் இல்லாமல் படப்பிடிப்பை நடத்துவோம்: விஷால்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ‘பெப்சி’ தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படிப்பிடிப்பை நடத்துவோம் என்று பட அதிபர்கள் சங்கம் பரபரப்பு முடிவை எடுத்துள்ளது.
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும், ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள பிரச்சினையில் திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆலோசிக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் விஷால் தலைமை தாங்கினார்.

    நிர்வாகிகள் கதிரேசன், ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு மற்றும் தாணு, கே.ஆர்., முரளிதரன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்ததும் நடிகர் விஷால் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் ‘பெப்சி’ தொழிலாளர்கள் இடையே பல நிலைகளில் சம்பள பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், ‘பெப்சி’யில் இருக்கும் சில அமைப்புகள் தன்னிச்சையாக செயல்பட்டு பேச்சுவார்த்தைக்கு தடைகளும், படப்பிடிப்புகளுக்கு தடங்கல்களும் ஏற்படுத்தி வருகின்றன. இதனால் பல தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.



    சம்பளத்தையும் அவர்களாகவே நிர்ணயிக்கின்றனர். அராஜக முறையில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பை நிறுத்திவிட்டனர். பயணப்படி அதிகம் கேட்கிறார்கள். தொழிலாளர்களுக்கு ஊதியத்தை தயாரிப்பாளர்கள் முறையாக வழங்குகின்றனர். அதேவேளை, அநியாயமான முறையில் பட அதிபர்கள் நஷ்டப்படுவதை ஏற்க இயலாது.

    எனவே, இதனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்கம் இனிமேல் ‘பெப்சி’ தொழிலாளர்கள் இல்லாமல் வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகளை நடத்திக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமான தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்.

    படப்பிடிப்புகளை ‘பெப்சி’ தொழிலாளர்கள் நிறுத்தினால், தயாரிப்பாளர்கள் சங்கம் தலையிட்டு பாதுகாப்பு அளிக்கும். ஏற்கனவே, கோர்ட்டில் தயாரிப்பாளர்கள் விரும்பியவர்களை படப்பிடிப்புகளில் பயன்படுத்திக்கொள்ள தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    ‘பெப்சி’ தொழிலாளர்களுக்கு எதிராக நாங்கள் செயல்படவில்லை. அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்.

    இவ்வாறு விஷால் கூறினார்.
    Next Story
    ×