என் மலர்

    சினிமா

    போதை பொருள் விசாரணைக்கு எதிராக நடிகை சார்மி புதிய வழக்கு
    X

    போதை பொருள் விசாரணைக்கு எதிராக நடிகை சார்மி புதிய வழக்கு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட தெலுங்கு நடிகர், நடிகைகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதில் நடிகை சார்மி விசாரணைக்கு எதிராக புதிய வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார்.
    ஐதராபாத்தில் பிடிபட்ட சர்வதேச போதை பொருள் கும்பலுடன் தெலுங்கு திரையுலக பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து நடிகர்கள் ரவிசேஜா, தரண், நவ்தீப், சுப்பராஜு, நந்துதனிஷ், நடிகைகள் சார்மி, முமைத் கான், இயக்குனர் பூரிஜெகனாத் உள்பட 12 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    இதில் இயக்குனர் பூரி ஜெகனாத், தருண், சுப்பராஜு, நவ்தீப், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடு ஆகியோரும் சிறப்பு புலனாய்வு குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

    அப்போது பூரிஜெகனாத், தருண், சுப்பராஜு ஆகியோரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. நடிகை சார்மி நாளை ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.



    இந்த நிலையில் நடிகை சார்மி ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ‘போதை பொருள் விவகாரத்தில் எனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டு இருக்கிறது. எனக்கு போதை பழக்கம் கிடையாது.

    போதை பொருள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். என்னுடன் எனது வக்கீல் உடன் இருக்க உத்தரவிட வேண்டும்.

    சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தல்படி விசாரணை நடைபெற வேண்டும். எனது அனுமதி இல்லாமல் ரத்த மாதிரி, தலைமுடி, நகங்கள் ஆகியவற்றை சேகரிக்க கூடாது. என்னிடம் பெண் அதிகாரிதான் விசாரணை நடத்த வேண்டும்.

    நான் திருமணமாகாத பெண். இதனால் எனது எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    Next Story
    ×