என் மலர்

    சினிமா

    திலீப் ஜாமீன் மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்
    X

    திலீப் ஜாமீன் மனுவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது கேரள உயர்நீதிமன்றம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கி நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை கேரள உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
    கேரளாவில் ஓடும் காரில் பிரபல நடிகையை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி பல்சர் சுனில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அதன் பிறகு அங்கமாலி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, திலீப் ஆலுவா சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இதற்கிடையே திலீப்புக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது வக்கீல், அங்கமாலி கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, திலீப்புக்கு ஜாமீன் வழங்க மறுத்தது. போலீஸ் காவல் முடிந்த பின்பு போடப்பட்ட ஜாமீன் மனுவையும் கோர்ட்டு நிராகரித்தது.

    இதையடுத்து திலீப்புக்கு ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் அவரது வக்கீல் மனுத்தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க திலீப்பின் வக்கீல் கேட்டுக் கொண்டார். ஆனால் போலீசாரின் கருத்தை அறிந்த பின்பே திலீப்பின் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட்டு தெரிவித்தது.

    அதன்படி, இந்த மனு இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஜாமீன் மனு குறித்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
    Next Story
    ×