என் மலர்

    சினிமா

    மொரோக்கோ நாட்டில் சல்மான்கான் குதிரை பயிற்சி செய்யும் வீடியோ: டிவிட்டரில் வெளியானது
    X

    மொரோக்கோ நாட்டில் சல்மான்கான் குதிரை பயிற்சி செய்யும் வீடியோ: டிவிட்டரில் வெளியானது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலிவுட் நடிகர் சல்மான் கான் மொரோக்கோ நாட்டில் சண்டைக்காட்சிக்காக குதிரை பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டில் வெளியான இந்திப்படமான "டைகர் ஜிந்தா ஹேய்" அவரது ரசிகர்களை மகிழ்வித்ததுடன் இல்லாமல் வசூலிலும் சாதனை படைத்தது.

    இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து "டைகர் ஜிந்தா ஹேய்" படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர். முதல் பாகத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் இந்தப் படத்தையும் இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டது. சல்மான் கானின் ஜோடியாக கத்ரீனா கைப் நடித்து வருகிறார்.

    இந்த படத்தின் வெளிப்புறக் காட்சிகள் ஆஸ்திரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடந்து முடிதுள்ள நிலையில் வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் படத்தை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, மொராக்கோ நாட்டில் சல்மான் கானும் கத்ரீனா கைப்பும் நடிக்கும் காட்சிக்கான படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒரு சண்டை காட்சியில் குதிரையில் சல்மான் கான் வருவதுபோல் படமாக திட்டமிட்டனர்.

    இதற்காக, சல்மான் கானுக்கு சிறப்பு பயிற்சியாளர் மூலம் குதிரை ஏற்றப் பயிற்சி அளிக்கப்பட்டது. சல்மான் கான் குதிரை பயிற்சி பெறும் காட்சிகளை சுருக்கி தொகுத்து, இப்படத்தின் இயக்குனரான அலி அப்பாஸ் ஜாபர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். டுவிட்டர் மூலம் படிப்படியாக பரவிய இந்த வீடியோ, பேஸ்புக், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் மூலமாக தற்போது வைரலாகி வருகிறது.
    Next Story
    ×