என் மலர்

    சினிமா

    பாவனா கடத்தல் வழக்கு: திலீப் நாளை மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்
    X

    பாவனா கடத்தல் வழக்கு: திலீப் நாளை மீண்டும் ஜாமீன் மனு தாக்கல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாவனா கடத்தல் வழக்கில் கேரள ஐகோர்ட்டில் நாளை ஜாமீன் மனு தாக்கல் செய்ய திலீப் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவரது வக்கீல் ஏற்பாடு செய்கிறார்.
    நடிகை பாவனா கடத்தல்  வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். முதலில் 2 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்தவும் பிறகு மேலும் ஒரு நாள் போலீஸ் விசாரணைக்கும் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதைதொடர்ந்து திலீப்பை போலீசார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்று ஆதாரங்களை திரட்டினார்கள். போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து திலீப்பை மீண்டும் நேற்று அங்கமாலி கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள்.

    அப்போது திலீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். வருகிற 25-ந்தேதி வரை அவரை கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஆலுவா கிளை ஜெயிலிலுக்கு திலீப்பை போலீசார் அழைத்துச் சென்று அடைத்தனர்.

    திலீப்பை போலீசார் கோர்ட்டில் ஆஜர் செய்த போது ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் திலீப்புக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் கோஷங்களை எழுப்பினார்கள். ஆனால் திலீப் எதையும் கண்டு கொள்ளாமல் சிரித்த படியே சென்றார். முன்னதாக நடிகர் திலீப் பயன்படுத்திய 2 செல்போன்களை அவரது வக்கீல் ராம்குமார் அங்கமாலி கோர்ட்டு நீதிபதியிடம் ஒப்படைத்தார். இந்த செல்போன்களை போலீசார் தவறாக பயன் படுத்த வாய்ப்பு இருப்பதால் கோர்ட்டில் ஒப்படைப்பதாக அவர் கூறினார்.

    அந்த செல்போன்கள் நடிகர் திலீப்பின் கை ரேகைகள் மூலம் மற்றவர்கள் பயன்படுத்த முடியாதபடி `லாக்' செய்யப்பட்டு இருந்தது. இதைதொடர்ந்து ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட திலீப்பை பாதி வழியிலேயே மீண்டும் போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அதன் பிறகு அவர் தனது கைரேகை மூலம் அந்த போனில் இருந்த `லாக்`கை திறந்தார். அங்கமாலி கோர்ட்டில் திலீப்பின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அடுத்தகட்டமாக  கேரள ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய திலீப் முடிவு செய்துள்ளார். நாளை (17-ந்தேதி) இதுதொடர்பாக  ஜாமீன் மனு தாக்கல் செய்ய அவரது வக்கீல் ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த வழக்கில் இன்னொரு முக்கிய குற்றவாளியான நடிகர் திலீப்பின் மேலாளர் அப்புண்ணி தொடர்ந்து தலைமறைவாக உள்ளார். அவரை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அப்புண்ணி போலீசில் சிக்கினால் பாவனா கடத்தல் வழக்கில் மேலும் வலுவான ஆவணங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

    எனவே அப்புண்ணி போலீஸ் கையில் சிக்கினால் நடிகர் திலீப்பிற்கு ஜாமீன் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் இதனால் அப்புண்ணி போலீசில் சிக்குவதற்கு முன்பு திலீப்பிற்கு ஜாமீன் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கொச்சியில் உள்ள நடிகர் திலீப்பின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சோதனை ரகசியமாக நடத்தப்பட்டதால் அங்கு சிக்கிய ஆவணங்கள் பற்றி போலீசார் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
    Next Story
    ×