என் மலர்

    சினிமா

    ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிய நிவின் பாலி
    X

    ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிய நிவின் பாலி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழில் நிவின் பாலி நடித்துள்ள `ரிச்சி' ரிலீசாக இருக்கும் நிலையில், ஒரே நேரத்தில் இரு படங்களில் நடிக்க நிவின் பாலி ஒப்பந்தமாகியிருக்கிறார்.
    நிவின் பாலி இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த `சகாவு' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, நிவின் தற்போது `ரிச்சி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், மலையாள சினிமா உலகின் பிரபல ஒளிப்பதிவாளரான ஜோமோன் டி ஜான் இயக்கத்தில் 'கைரளி' என்ற பிரம்மாண்டமான படத்தில் நிவின் பாலி நடிக்க இருக்கிறார்.

    'சார்லி', 'என்னு நின்டே மொய்தீன்', 'திரா' போன்ற மலையாள படங்களுக்கும், பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய 'கோல்மால் 4' கும் ஒளிப்பதிவு செய்து, இந்திய சினிமாவில் முக்கியமானராக விளங்கியவர் ஜோமோன் T ஜான். இவரது இயக்கத்தில் இவரது முதல் படமான 'கைரளி' 1979'-ல் மர்மமான முறையில் மாயமாகிய 49 பேர் கொண்ட கேரளாவின் முதல் கப்பல் 'MV கைரளி' பற்றிய கதையாகும்.



    இப்படத்திற்கு தேசிய விருது இயக்குநரும், நிவின் பாலியை வைத்து `சகாவு' என்ற படத்தை இயக்கியவருமான சித்தார்தா சிவா 'கைரளி' படத்திற்கு திரைக்கதை எழுதவுள்ளார். இப்படத்தை நடிகர் நிவின் பாலியின் "பாலி Jr பிக்ச்சர்ஸ்" மற்றும் "ரியல் லைப் ஒர்க்ஸ்" நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.

    நிவின் பாலியின் 'தட்டத்தின் மறயத்து', 'ஒரு வடக்கன் செல்பி', ஜாக்கோபிண்டே ஸ்வர்கராஜ்யம்' உள்ளிட்ட படங்களுக்கு ஜோமோன் டி ஜான் ஒளிப்பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, கோவா, டெல்லி, குவைத், ஜெர்மனி மற்றும் ஜிபோட்டியிலும் நடக்கவுள்ளது.

    மேலும் 24 ஏ.எம் ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டிராஜா தயாரிப்பில் `புரொடக்‌ஷன் நம்பர் 3' என்ற தலைப்பில் தமிழ் படம் ஒன்றில் நடிக்கவும் நிவின் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை `ரெமோ' படத்தின் ப்ரோமோ பாடலை இயக்கிய பிரபு ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கிறார்.

    Next Story
    ×