என் மலர்

    சினிமா

    பெண்கள் எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்: ஹன்சிகா
    X

    பெண்கள் எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும்: ஹன்சிகா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பெண்கள் எதிரான வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் என்று நடிகை ஹன்சிகா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்.
    நடிகை ஹன்சிகா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-

    “சமூகத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் பெருகி வருவது கவலை அளிக்கிறது. தவறு செய்பவர்கள் திருந்த வேண்டும். ஒரு பெண்ணுக்கு தொல்லை கொடுப்பதால் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும். தவறு செய்தால் நிம்மதி போய் விடும். தைரியமாகவும் வாழ முடியாது. எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.

    நடிகைகளுக்கும் சினிமாவில் தொந்தரவுகள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனக்கு அந்த மாதிரி எந்த அனுபவமும் ஏற்படவில்லை. நடிகையாக அறிமுகமானபோது எனக்கு ஏதேனும் தொல்லை நேர்ந்து இருந்தால் நான் சினிமாவை விட்டே ஓடி இருப்பேன். அதிர்ஷ்டவசமாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

    பெண்கள் தனியாக போனில் பேசிக்கொண்டு இருந்தால் பெற்றோர்கள் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். ஆனால் மகன் விடிய விடிய தனியறைக்குள் கம்ப்யூட்டரிலேயே மூழ்கி கிடந்தாலும் கண்டு கொள்வது இல்லை. இந்த மனப்போக்கு மாற வேண்டும். ஆண் குழந்தைகளையும் எச்சரிக்கையாக கண்காணிப்போடு வளர்க்க வேண்டும்.



    எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு மூலஸ்தானத்தை சுற்றி வருவேன். அப்போது ரசிகர்கள் என்னை பின்தொடர்ந்து வருவார்கள். இது எனக்கு கஷ்டமாக இருக்கும். ஆனாலும் அவர்களின் அன்பின் வெளிப்பாடாக அதை நினைத்துப் பொறுத்துக் கொள்வேன்.

    எனக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். திருமணத்துக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது. என் முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது. நான் சிறுவயதில் இருந்தே பண கஷ்டம் இல்லாமல் வளர்ந்தேன். நிறைய குழந்தைகள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் தெருவோரம் நிற்பதை பார்த்து இருக்கிறேன்.

    அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலால் 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறேன். அவர்களுக்கான சாப்பாடு, படிப்பு செலவுகளை கவனித்துக்கொள்கிறேன். முதியோர்களுக்காகவும் இல்லம் ஒன்றை கட்ட இருக்கிறேன்.”

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×